×

ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை : விபத்து ஏற்படும் அபாயம்

ஆலந்தூர்:  ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட   ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடி  எப்போதும்  திறந்தே காணப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட  ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடி எப்போதும்  திறந்தே காணப்படுகிறது. இந்த மேன்ஹோல் மூடி மீது, ஒரு பக்கம் காலை வைத்தால் மற்றொரு பக்கம் தூக்கிக்கொள்கிறது. இதனால், தடுமாறும் நிலை ஏற்படுவதுடன்  உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் உடைந்துள்ளதால் மூடி  ஆட்டம் கண்டுள்ளது. இதனை மாற்றி புதிய மேன்ஹோலை கட்டித் தருமாறு சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதுபோல பல்வேறு இடங்களில் மேன்ஹோல்கள் திறந்தும், இன்னும் பல இடங்களில்  உடைந்தும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் இது போன்ற இடங்களில் நடமாடும் வயதானவர்கள் விழுந்து விடும் அபாய நிலையும் உள்ளது.

இந்த மேன்ஹோல்களில் இருந்து கொசுக்கள் வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து விடுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. ஆதம்பாக்கத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மேன்ஹோல்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்தந்த பகுதிகளிலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டு, கொசு உற்பத்தியும் அதிகம் ஏற்படுகிறது. இவற்றை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி கழிவுநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட   ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடி  எப்போதும்  திறந்த நிலையில் தான் உள்ளது. இதனால் இந்த  பகுதியை கடக்கும்போது, கவனமாக வந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இனியும் அதிகாரிகள் தாமதிக்காமல் இப்பகுதியில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை மூடி  வைக்கவும், அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும்’’ என்றனர்.


Tags : Adambakkam ,accident , Adambakkam, West Karikalan Risk , accident
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு