×

புனித எண்ணெய்யை தொட போட்டா போட்டி தான்சானியா தேவாலயத்தில் நெரிசலில் 20 பேர் பலி

நைரோபி: தான்சானிய தேவாலயத்தில், பிரபல மதபோதகர் தரையில் ஊற்றிய புனித எண்ணெய்யை தொட மக்கள் போட்டி போட்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாயினர். இந்த எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. தான்சானியா நாட்டின் வடபகுதியில் உள்ளது மோசி என்ற நகரம். இங்குள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை பிரபல மதபோதகர் போனிபேஸ் மவம்போசா என்பர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இவர் தன்னை இறைதூதர் என  கூறிவந்தார்.  

இதில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பிரார்த்தனைக்குப்பின் இவர் தன்னிடம் உள்ள புனித எண்ணெய்யை தொட்டால், அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என கூறியுள்ளார். அந்த எண்ணெய் அவர்  தரையில் ஊற்றினார். அதைத் தொட மக்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கில 20 பேர் பலியாயினர் பலர் காயம் அடைந்தனர். ‘‘கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் மிதிபட்டதும், ஒருவரையொருவர் முழங்கையால்  தாக்கி கொண்டதும் கொடூரமாக இருந்
தது’’ என பீட்டர் கிலேவோ என்பவர் கூறினார்.

Tags : Tanzania , Competition,o touch, Tanzania church, traffic jam
× RELATED வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு தான்சானியாவில் 63 பேர் பலி