×

அமெரிக்க ராணுவ தளம் மீது மீண்டும் தாக்குதல்: ஈராக் ராணுவம் தகவல்

கெய்ரோ: ஈராக்கில் அமெரிக்க ராணுவத் தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈராக்கில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்த, அந்நாட்டின் ராணுவப் படையினருக்கு பயிற்சி, ஆலோசனை வழங்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதற்கிடையே, ஈரான் தளபதியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி கொன்றதை தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி  வருகிறது.

ஈராக்கின் மொசூல் நகரை அடுத்த அல் கயாரா விமான தளத்தின் மீது நேற்று முன்தினம் இரவு 5 பீரங்கி குண்டுகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ஈராக் கூட்டு நடவடிக்கை படைத் தலைவர்  விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதே ராணுவ தளத்தை குறிவைத்து கடந்த நவம்பர் மாதம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Tags : Re-attack ,US ,Iraqi ,Military Base Re-Assault , US, military, Re-Assault, Iraqi, Military
× RELATED 2 வாரங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க...