×

முத்தரப்பு மகளிர் டி20: இந்தியா முதல் தோல்வி

கான்பெரா: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள்  பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை விளையாட வேண்டும்முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இந்நிலையில் கான்பெராவில் நேற்று நடந்த 3வது போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட இந்தியா 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103  ரன் எடுத்தது.

இந்தியா தரப்பில் ஸ்மிரிதி மந்தானா 35, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28 ரன் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் எல்லிசா பெர்ரி  4, டயாலா விலேமினிக் 3,  மேகன் ஸ்கவுட், ஜெஸ் ஜோனஸ்சன்  ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து களம் கண்ட  ஆஸ்திரலியா 18.5ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 104 என்ற இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிசா பெர்ரி 49, ஆஷ்லி கார்டனர் 22 ரன் எடுத்தனர்.
இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெயக்வாட் 2, தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.முதல் சுற்றில் 3 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் 2வது சுற்றுப் போட்டிகள் பிப்.7ம் தேதி தொடங்குகின்றன. முதல் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதுகின்றன.

Tags : Tripartite, Women T20, India, Failure
× RELATED ட்வீட் கார்னர்... பயிற்சி செய்யலாமா?