×

கலவை அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: புதிதாக அமைக்க கோரிக்கை

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பென்னகர் கிராம ஊராட்சியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த 2012ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியானது சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித  நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை  அகற்றிவிட்டு, புதியதாக மேல்நீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : compound , Overhead water stack in dangerous position near the compound: Request to set anew
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல்