×

மிரட்டும் கொரோனா வைரஸ்; சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வழங்குவது தங்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வழங்குவது தங்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 323 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

சீனாவில் இருந்து சீனா குடிமக்கள் மற்றும் சீனாவில் தங்கி இருக்க கூடிய வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரக்கூடிய இ-விசா முறையை தற்போது தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்க முடிவு எடுத்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது,சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : China ,nationals ,Chinese , Corona virus, Chinese, e-visa, stop, central government
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...