×

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் புதிய கல்வி கொள்கை பற்றி மத்திய அரசு விவாதிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி புதிய கல்வி கொள்கை பற்றி மத்திய அரசு விவாதிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். தேசிய கல்வி கொள்கை மீது நாடு முழுவதும் தரப்பட்ட ஆலோசனைகள் எத்தனை ஏற்கப்பட்டன என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரைவு கல்விக் கொள்கையில் உள்ள எதிர்மறையான அம்சங்களை நீக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

Tags : government ,Ramadas Ramadoss ,party leaders , Ramadoss
× RELATED பிரதமர் மோடியின் பேச்சு குறித்து...