×

எல்ஐசி தனியார்மயம் 4ம் தேதி வேலைநிறுத்தம்: இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் எல்ஐசி தனியார் மயமாக்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, வரும் 4ம் தேதி வெளிநடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தனியார் மயத்திற்கு காரணம் நட்டத்தில் பொதுத் துறை இயங்குவது, திறமையற்ற நிர்வாகம், சேவை என்றார்கள். மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்கிறார்கள். இப்படி எந்தவொரு குற்றச்சாட்டையாவது எல்ஐசி மீது இந்த அரசாங்கத்தால் சொல்ல முடியுமா?எல்ஐசி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்த தொகை ரூ. 2611 கோடி. எல்ஐசியின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகள். ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு,மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும் அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ. 2,88,4331கோடிகள். ரூ. 40 கோடி பாலிசிகளை இன்று எல்ஐசி வைத்திருக்கிறது.

இவ்வளவுபாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும்பெற்றுள்ளது. பாலிசித்தார்களுக்கான உரிம பட்டுவாடாவை 98.4 சதவிதம் என்கிற அளவில்வைத்துள்ளது. இதுவும் உலகின் நம்பர் 1 சதவீதம் எல்ஐசி ஓராண்டிற்கு தரும் 3.50 லட்சம் கோடி எங்கே?. இவர்கள் கொண்டு வந்துள்ள முதலீடுகள் எங்கே? இப்படி எந்த ஒரு தரவும் இன்றி எல்ஐசியின் தனியார் மயம் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல், தேசநலனுக்கு எதிரானது என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மையங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் பட்ஜெட் முன் மொழிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பிப்ரவரி 4 அன்று நாடு தழுவிய 1 மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதரதொழிற்சங்கங்களையும் கலந்தாலோசித்து, இணைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். அரசு தன் நிலைபாட்டை மாற்றாவிட்டால் போராட்டங்கள்தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Announcement ,Strike ,LIC ,Insurance Staff Federation , Strike, Insurance Staff, Federation, Announcement
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...