×

குரூப் 2ஏ முறைகேடு பெண் உள்பட அரசு ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை: குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் மையத்தில் குரூப் 2ஏ தேர்வை கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 31ம் தேதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நேற்று இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த குரூப் 2ஏ தேர்வில் தனது அண்ணன் சித்தாண்டி காவலர் மூலம் முறைகேடு செய்து 285 மதிப்பெண்கள் பெற்று 8வது இடத்தில் தேர்ச்சி பெற்று காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம், அண்ணாமலை நகரை சேர்ந்த வேல்முருகன் (30) மற்றும் சித்தாண்டி காவலர் மூலம் பணம் கொடுத்து முறைகேடு செய்து 276 மதிப்பெண்கள் பெற்று 21 இடத்தில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்த ஜெயராணி (30) ஆகிய 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் குரூப் 4 தேர்வு முறைகேடுகளில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குரூப் 2ஏ தேர்வில் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : servants ,arrests ,female , Group 2A arrests 2 civil servants, including a female
× RELATED தனியாக வசிக்கும் வங்கி அதிகாரி...