தேசிய சிலம்பாட்டம் பதக்கம் வென்ற லத்திகா

சென்னை: தேசிய அளவில் நடைபெற்ற பள்ளி களுக்கு   இடையிலான சிலம்பாட்டப்   போட்டியில், சென்னை மாணவி லத்திகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை மயிலாப்பூர்பகுதியில் உள்ள எம்சிடிஎம் சிதம்பரம் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி எம்.லத்திகா. சிறுவயது முதலே ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான கலையான சிலம்பம் போட்டியிலும் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் பதக்கங்கள் வென்று வருகிறார்.

சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 65வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற லத்திகா, ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கம் வென்ற லத்திகாவையும், அவரது பயிற்சியாளர் பாண்டியனையும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories:

>