×

திருவாலங்காட்டில் பஞ்சலோக சிலைகள் வடிவமைப்பு: சிற்பிகள் பேட்டி

சென்னை: சென்னை அருகே திருவாலங்காட்டில் உலகப் புகழ்பெற்ற ஐம்பொன் சிலை தயாரிக்கப்படுகிறது. தமிழக கோயில்களில் கல் சிற்பம் மற்றும் பஞ்சலோகத்தால் ஆன சிலைகள் கோயில் கருவறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய 5 உலோகங்களால் செய்யப்பட்ட பஞ்சலோக சிலைகள் தயாரிக்கப்பட்டன.இதில் செம்பு 80 சதவீதமும், துத்தநாகம் 14 சதவீதமும், ஈயம் 3 சதவீதமும், தங்கம் மற்றும் வெள்ளி சிறிதளவும் சேர்க்கப்படுகின்றன. இத்தொழிலில் நீண்டகால அனுபவம் கொண்ட திருவாலங்காடு வெங்கடேஸ்வரா சிற்ப கலைக்கூடம் சிற்பிகள் வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோர் கூறுகையில், ‘’நாங்கள் குடிசை தொழிலாக இதை செய்து வருகிறோம்.

விநாயகர் சிலை, அம்மன் சிலை, முருகன் சிலை போன்றவற்றை சாந்தமாகவும், புன்னகையுடனும் வடிவமைக்கப்படுகிறது. காளி, ஆஞ்சநேயர் போன்ற சிலைகளைச் சற்று உக்கிரமாக வடிவமைக்கப்படுகிறது. சிற்ப சாஸ்திரப்படி ஒவ்வொரு சிலைக்கும் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.சிற்பங்கள் உருவாக்க பொருத்தங்களும் பார்க்கப்படுகிறது. குறைந்தது 8 பொருந்தங்களாவது இருக்க வேண்டும். அதில் முக்கியமானது ஆயுட்காலப் பொருத்தம். ஆயுள் பொருத்தம் பார்த்து செய்தால் சிலைகள் ஆயுள் குறையாது.

ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா?
சிற்பிகள் கூறுகையில், ‘’முன்பு போல் தற்போது சிலை விற்பனை நடைபெறுவதில்லை. சிலை கடத்தல் என நாள்தோறும் செய்திகள் வரவே தற்போது நாங்கள் தயாரிக்கும் சிலைகளை வாங்கவே பொதுமக்கள் தயங்குகிறார்கள். மேலும் உலோகங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதம். இதனால் சிலைகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனை மத்திய அரசு குறைத்தால் நலிவடைந்த பல கைவினை கலைஞர்கள் மறுவாழ்வு பெறுவார்கள். எங்களுடைய வாழ்நாள் வரை விக்ரகங்கள் தயாரிப்பில் இருப்போம். எங்களுடைய வாரிசுகளுக்கு இந்தத் தொழில் வேண்டாம் என நினைக்கிறோம். வருமானம் இல்லாமல் அவர்கள் நாள்தோறும் கஷ்டப்படக்கூடாது’’ என்றனர்.

Tags : Trivandrum ,sculptors , Design, Panchaloka statues, Trivandrum,Interview with sculptors
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...