×

மாங்காய் சாதம்

செய்முறை : மாங்காயை தோல் சீவி துருவவும். வாணலியில் எண்ணைய் காய்ந்ததும் கடுகு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். இதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும். தொடர்ந்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை கிள்ளி போடவும். இத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டுக் கிளறி, சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.  மாறுபட்ட சுவையில் மாங்காய் சாதம் ரெடி.



Tags : Mango Chatham
× RELATED தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்.,...