×

ஸ்வீட் சோமாஸ்

வறுத்த கடலையையும், சர்க்கரையையும் சம அளவு எடுத்து தனித்தனியாக, நன்கு பொடியாக அரைக்கவும். தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து, கிளறி பூரணம் தயார் செய்து கொள்ளவும். ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊற வைக்கவும்.பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து, வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் சோமாஸ் ரெடி.

Tags : Sweet Somas
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...