×

பட்ஜெட் தயாரிப்பில் 5 உயர் அதிகாரிகள்

1. நிதித்துறை செயலாளர்
நிதி அமைச்சகத்தில் மூத்த அதிகாரியான ராஜிவ் குமார், வங்கிகள் இணைப்பு உள்பட வங்கிகள் சீரமைப்பு பணி, வராக்கடன் சுமையால் வங்கிகள் முடங்கிய நிலையில் இருந்து மீட்டு தொழில் துறையினருக்கு கடன் கொடுக்கும் பணி ஆகியவற்றை மேற்கொண்டார். இவர், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு தேவையான யோசனைகளை அரசுக்கு தெரிவித்துள்ளார்.
2. பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர்
அரசு சொத்துகள் விற்பனையில் திறமைவாய்ந்தவரான அதானு சக்ரவர்த்தி, கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பொறுப்பேற்றார். ஒரு லட்சம் கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க இவரது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தங்க பத்திரம் மூலம் வெளிநாடுகளில் முதலீடுகளை திரட்டுவதில் திறம்பட செயலாற்றியவர்.
3. செலவு விவகாரங்கள்
துறை செயலாளர்
மத்திய நிதி அமைச்சகத்தில் சமீபத்தில் சேர்ந்தவர் சோமநாதன். அரசு துறைகளில் தேவையில்லாத செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார்.
4 வருவாய் துறை செயலாளர்
வரி வசூல் மதிப்பீட்டைவிட குறைவாக வருவாய் இருப்பதால், நிதி ஆதாரத்தை பெருக்கும் நிர்பந்தத்தில் இந்த பொறுப்பை வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே ஏற்றுள்ளார். நேரடி வரிகள் வருவாயைப் பெருக்கும் சில சீர்திருத்த நடவடிக்கைளை எடுத்துள்ளார்.
5. முதலீடுகள் துறை செயலாளர்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு முதலீடுகள் மூலம் நிதி திரட்டும் பணியை முதலீடுகள் துறை செயலாளர் துகின் காந்த பாண்டே ஏற்றுள்ளார். நலிவடைந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பதன் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tags : executives , Budget preparation, 5 high, officials
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது