×

இன்று 5வது டி20 நியூசி.யை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

மவுன்ட் மவுங்கானுயி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பே ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடந்து வரும் டி20 தொடரில், ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. அடுத்து ஹாமில்டனில் நடந்த 3வது டி20 போட்டியில் இரு அணிகளும் தலா 179 ரன் எடுத்து ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது.

அதில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என முன்னிலை பெற்றதுடன் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. வெலிங்டனில் நடந்த 4வது போட்டியும் சரிசமனில் முடிந்ததை அடுத்து (இந்தியா 165/8; நியூசி. 165/7), சூப்பர் ஓவர் வீசப்பட்டதில் இந்திய அணி மீண்டும் அசத்தலாக வென்று 4-0 என முன்னிலையை அதிகரித்தது. இந்நிலையில், 5வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதிலும் வென்று 5-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அதே சமயம் ஆறுதல் வெற்றிக்காக நியூசிலாந்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : India Make White Wash Today 5th T20 NYC , Today, 5th T20, NYC, White Wash, India?
× RELATED ராயல்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்