×

கோடை சீசனுக்காக பராமரிப்பு பணி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணிக்காக பெரிய புல்மைதானம் மூடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். கோடை சீசனுக்காக, 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறிய பூங்காங்கள் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பூங்கா பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டள்ளது. மேலும், நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பனி பொழிவில் இருந்து பாதுகாக்க பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடந்து வருகிறது. புல் மைதானத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Botanical Garden Grass Ground, Closure
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30)...