×

திருவாரூரில் இருந்து தஞ்சை வரை மின் பாதையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம்: பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர்: திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் வரையிலான மின் ரயில் பாதையில் நேற்று பாதுகாப்பு ஆணையரின் தலைமையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வேயில் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு ரயில் இன்ஜின்கள் இயக்கப்பட்ட நிலையில் பின்னர் அந்த இன்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செலவு மற்றும் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், இழுவை திறனை அதிகரிப்பதற்காகவும் தற்போது நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயம் ஆக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தென்னக ரயில்வேயில் ஏற்கனவே சென்னையில் இருந்து விழுப்புரம் வரையில் மின்மயம் இருந்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் வரையிலும், இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை வரையிலும் என 286 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபா 330 கோடி மதிப்பில் மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருச்சியிலிருந்து தஞ்சை திருவாரூர் வழியாக காரைக்கால் வரையிலான ரயில் பாதையிலும் இந்த மின்மயம் பணிகள் ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றன. அதன்படி ஏற்கனவே திருச்சியிலிருந்து தஞ்சை வரையில் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மின்மய பணிகள் தற்போது முடிவுற்றுள்ளதையடுத்து இதற்கான சோதனை ஓட்டம் என்பது கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த குறைபாடுகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மின் பாதையில் ரயில் ஓட்டம் துவங்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே ரயில் இயக்க முடியும் என்பதால் இந்த ரயில் பாதையில் நேற்று (31ம் தேதி) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.

முன்னதாக காலை 8.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து டீசல் ரயில் இன்ஜின் கொண்டு தனிரயிலில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கோட்ட மேலாளர் அஜய்குமார், இயக்க மேலாளர் பூபதிராஜா மற்றும் அலுவலர்கள் புறப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு ரயில் நிலையமாக மின் பாதை குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி சாலியமங்கலம், அம்மாபேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக மதியம் 12.30 மணி அளவில் திருவாரூர் வந்த அவர்களை அலுவலர்கள் மற்றும் ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், நுகர்வோர் அமைப்பு செயலர் ரமேஷ் மற்றும் பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் மாலை 4.37 மணி அளவில் திருவாரூரிலிருந்து மின்சார ரயிலில் பாதுகாப்பு ஆணையர் மற்றும் அலுவலர்கள் அதிவேக சோதனை ரயில் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

40 நிமிடத்தில் 55 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த மின்சார ரயில் திருவாரூரில் பூஜைகள் நடைபெற்றது அதன் பின்னர் மாலை 4 .37 மணி அளவில் புறப்பட்ட இந்த மின்சார ரயிலானது 5. 17 மணி அளவில் தஞ்சாவூரை அடைந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இந்த ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில் 40 நிமிடங்களில் 55 கிலோ மீட்டரை அடைந்துள்ளது. அதன்படி சில இடங்களில் 120 கிலோ மீட்டரிலும், பிற இடங்களில் சராசரியாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இந்த ரயில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

40 நிமிடத்தில் 55 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த மின்சார ரயில் திருவாரூரில் பூஜைகள் நடைபெற்றது அதன் பின்னர் மாலை 4 .37 மணி அளவில் புறப்பட்ட இந்த மின்சார ரயிலானது 5. 17 மணி அளவில் தஞ்சாவூரை அடைந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இந்த ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில் 40 நிமிடங்களில் 55 கிலோ மீட்டரை அடைந்துள்ளது. அதன்படி சில இடங்களில் 120 கிலோ மீட்டரிலும், பிற இடங்களில் சராசரியாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இந்த ரயில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tanjore ,Thiruvarur , High-speed test train, Commissioner of Defense
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை