×

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விவரம் பிப்ரவரி 3-ம் தேதி அறிவிப்பு

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விவரம் பிப்ரவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை பொக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேரை 2018 ஜூலையில் போலீசார் கைது செய்தனர். 2019 ஜனவரி முதல் 11 மாதங்கள் பாலியல் வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 


Tags : Ayanavaram ,Sentencing , Ayanavaram, Minor Sexual Abuse, Punishment
× RELATED சென்னை அயனாவரம் சிறுமி பாலியல்...