×

சிறைத்துறையில் ஊழல் நடைபெறுகிறது; தவறு கண்டுப்பிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரிக்கை

சென்னை: சிறைத்துறையில் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை துணைத்தலைவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சிறைகளில் தவறு கண்டுப்பிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரிய ரவுடிகள், முக்கிய பிரமுகர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையில் தேவையான வசதி செய்து கொடுத்துள்ளனர்.

சிறைவாசிகளை சந்திக்க வரும் உறவினர்களிடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தர சொல்வதாகவும், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விடுமுறை நாட்களில் பார்வையாளர்களை அனுமதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறையில் கைதிகள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்த அனுமதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறைக்கைதிகளை சாதிய அடிப்படையில் காவலர்கள் நடத்தியதாகவும், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கைதிகளையும், லஞ்சம் பெற்ற பிறகே சிறையில் இருந்து வெளியே விடுவதாகவும் டிஐஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கான மருந்துகளை மருத்துவர்கள் செவிலியர் உதவியுடன் கடத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DIG ,prison , Prison, DIG, corruption, lunge, DIG alert
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி