×

தாய்லாந்தில் இருந்து சென்னை கடத்தி வந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த இப்ராஹிம்ஷா (38) என்பவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று, சென்னை திரும்பி வந்தார். அவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தடுத்து நிறுத்தி, அவரது தோளில் இருந்த பையை வாங்கி திறந்து பார்த்தனர். அதில் 2 பிளாஸ்டிக் டப்பா, ஒரு டிபன் பாக்ஸ், ஒரு கேக் வைக்கும் பெட்டி ஆகியவை இருந்தது. அதில் சாக்லெட் மற்றும் பேப்பர் பிஸ்கட் இருப்பதாக கூறினார். அதை திறந்து பார்த்தபோது, அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன. சகாரா பாலைவனத்தில் வசிக்கக்கூடிய 4 சிம்பெனிக் எலிகள், இருந்தன. ஆப்பிரிக்கா கண்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வசிக்கும் கொடிய விஷமுடைய 3 சிலந்திகள், மெக்சிகோ நாட்டில் உள்ள 1 மரப்பள்ளி. தென் அமெரிக்காவில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட தவளை 1, ஓங்கோலா நாட்டில் உள்ள 2  கீரிப்பிள்ளை, ஜாம்பியா நாட்டில் உள்ள பச்சோந்தி 1 என மொத்தம் 7 வகையான 13 உயிரினங்கள் உயிருடன் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்து, இப்ராஹிம்ஷாவை கைது செய்தனர். பின்னர், சென்னையில் உள்ள வன உயிரின குற்ற காப்பகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து நடத்திய ஆய்வில் இந்த உயிரினங்கள் அனைத்தும் நல்ல ஆரோக்கியமாக இருந்தது தெரிந்தது. ஆனால் இதன் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அதை தாய்லாந்துக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். இவற்றை, நாளை காலை 2.30 மணிக்கு தாய்லாந்து அனுப்ப முடிவு செய்தனர். சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு அனுப்பக்கூடிய செலவை இப்ராஹிம்ஷாவிடமே வசூல் செய்தனர்.  

விசாரணையில், நான் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்தேன், தாய்லாந்து விமான நிலையத்தில் ஒரு ஆசாமி, இந்தப் பையை என்னிடம் கொடுத்தார். இதை எடுத்து செல்லுங்கள். சென்னை விமான நிலையத்தில் ஒருவர் இந்த பையை வாங்கிவிட்டு உங்களுக்கு சன்மானமாக 5.000 தருவார் என்றார். அதை நம்பி வாங்கி வந்தேன் என்று கூறினார். ஆனால் குற்றப்பிரிவு போலீசார் அவரை நம்பவில்லை. இப்ராஹிம்ஷா இதை எதற்காக, யாருக்காக கொண்டு வந்தார். இதற்கு முன்பு இதுபோல் கடத்தி வந்துள்ளாரா?, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தாய்லாந்தில் இருந்து அனில், ஓனான், பல்லிகள், குரங்குகள் மற்றும் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிலையில், கொடிய விஷ ஜந்துகளையும் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

Tags : Thailand , Rare species recovered , Thailand
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...