×

நாடோடிகள்-2 படத்திற்கான தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில்  நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தைதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர்  நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது  என அறிவிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக “கீ டெலிவரி மெசேஜ்” தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளர் நந்தகோபால் சார்பில் நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி படத்தை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

Tags : Supreme Court ,removal , Supreme Court,orders, removal , nomadic film
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...