வேளாங்கண்ணி அருகே கட்சி மாறிய விவகாரத்தில் கம்யூனிஸ்ட்கள் மோதல்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (59). இவர் தலைமையில் 43க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக கடந்த ஜனவரி 25ம் தேதி இணைப்பு நிகழ்ச்சி கீழையூரில் நடைபெற்றது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் 25 நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். 43 பேர் கட்சியில் இணைவதாக நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு கட்சியில் இணையாதவர்கள் பெயர்களையும் ஏன் நோட்டீஸ்சில் பெயர் போட்டீர்கள் என்ற பிரச்சனை அன்று முதல் இருந்து வந்துள்ளது.  

நேற்றுமுன்தினம் இரவு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமனிடம் ஏன் நீங்கள் எங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரமாட்டீர்களா என ராமலிங்கம் கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கீழையூரில் இரண்டு கட்சிகளுக்கு இடையே தகராறில் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அசுதன்(42) என்பவரது கூரை வீடுக்கு தீ வைக்கப்பட்டது.  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த3 பேர் காயம் அடைந்தனர். கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: