×

புதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் நிர்வாகி படுகொலை

பாகூர்: புதுச்சேரி மாநிலம், கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம், அங்களாம்மன்  கோயில் வீதியை சேர்ந்தவர் சாம்பு என்கிற சாம்பசிவம் (34). காங்கிரஸ்  பிரமுகரான இவர் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்.  இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு கைக்குழந்தை உள்ளது. தற்போது அவரது  தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையொட்டி, நண்பர்கள்  மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சாம்பசிவம் நேற்று காலை  ஒரு காரில் தனியாக புதுச்சேரி நோக்கி சென்றார். கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப  பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் வண்டியின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது  அங்கு 2 பைக்கில் மறைந்திருந்த 6 பேர் கும்பல் கார் மீது நாட்டு  வெடிகுண்டை வீசியது. அதில் தப்பிய சாம்பசிவம் மீது மற்றொரு குண்டு  வீசப்பட்டது. இதிலிருந்தும் தப்பியதால், 3வது  குண்டு வீசியவுடன் சாம்பசிவத்தின் தலை மீது விழுந்து வெடித்தது.  காயமடைந்த அவர் உயிர் பிழைக்க காரை நிறுத்திவிட்டு இறங்கி  தப்பியோடினார்.

 இருப்பினும் அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியது. இதில் தலை  சிதைக்கப்பட்ட நிலையில் சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார்.  உடனே கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. போலீசார் சாம்பசிவத்தின் உடலை மீட்க வந்தனர். அப்போது சடலத்தை எடுக்க விடாமல்  உறவினர்கள் கதறி அழுதனர். அதன்பிறகு 100 போலீசார் வரவழைக்கப்பட்டு  சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு  படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அதிகாரிகள் அவர்களை  விலக்கிவிட்டு வண்டியை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அங்கு கொலைக்கான சில தடயங்களை  சேகரித்த போலீசார், கொலை வழக்குபதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு அமைச்சர் கந்தசாமி உதவியாளரும், முன்னாள்  கவுன்சிலருமான வீரப்பன் படுகொலை செய்யப்பட்டார். இவர் சாம்பசிவத்தின்  மைத்துனர் ஆவார். ஏற்கனவே அதே ஊரை சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகரான  அமுதனுக்கும், சாம்பசிவத்துக்கும் அரசியல் முன்விரோதம் இருந்துள்ளது.  இதனால் சாம்பசிவத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவரை கொலை செய்தால்  வீரப்பன் தன்னை பழிதீர்த்துவிடுவார் என கணக்கு போட்ட அமுதன்  தரப்பு முதலில் வீரப்பனை கொலை செய்தது.அமுதன் தரப்பைச் சேர்ந்த சிலரை தனிப்படை  வலைவீசி தேடி வருகிறது.

Tags : Bomb attack ,Congress , Bomb attack , Congress ,leade, killed
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...