×

பூதப்பாண்டியில் கோயில் தேர் சட்டங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

பூதப்பாண்டி:  குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி - சிவகாமி அம்பாள் கோயில் தைத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தேரோட்ட நிகழ்ச்சி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியின் போது தேரில் உள்ள மரத்திலான சட்டங்கள் பட்டுத்துணியாலும், பூ மாலையாலும் அலங்கரிப்படுவது வழக்கம். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தேரின் சட்டங்கள் கழற்றி பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்தன. திருவிழா தொடங்கியதை அடுத்து நேற்று முன்தினம் தேரின் சட்டங்கள் வெளியே எடுத்து  வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தேரின் சட்டங்கள் தீப்பிடித்து எரிவதை அப்பகுதியினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சத்தம் போடவே கோயில் நிர்வாகிகள் வந்தனர். மொத்தம் 200 சட்டங்களில், 18 சட்டங்கள் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாகின. மேலும் 10 சட்டங்கள் பாதி எரிந்து காணப்பட்டன. சட்டங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Poothapandi , Mysterious people,set fire , temple chariots, Poothapandi
× RELATED பூதப்பாண்டி அருகே பேராசிரியையை...