×

நக்ரோட்டா சுங்கச்சாவடி அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா சுங்கச்சாவடி அருகே 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர். ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நக்ரோட்டா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் காவலர் ஒருவர் காயமடைந்தார். ஜம்முவை ஸ்ரீநகருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருவதால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, லாரி மூலம் அங்கு வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து போலீசாரும் திருப்பிச் சுட்டனர். இந்த நிலையில், லாரியில் இருந்து தப்பியோடிய இரு தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே அங்கு துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காயமடைந்த காவலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் சில வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், ‘3 முதல் 4 தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களை போலீஸ் குழுவினர் டோல் பிளாசாவில் தடுத்து நிறுத்தினர். கத்துவா மாவட்டத்தில் ஹிராக்நகரில் உள்ள சர்வதேச எல்லையிலிருந்து இந்த பக்கத்திற்குள் நுழைந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் தீவிரவாதிகள் புதிதாக ஊடுருவிய குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர். என்கவுன்ட்டரைத் தொடர்ந்து இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலை பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நக்ரோட்டாவில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : militants ,Nakrota Customs: Security Forces Action , Militants
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி