×

பள்ளிகொண்டா சிறுவர் இல்லத்திற்கு வாட்டர் ஹீட்டர் இயந்திரம் ஐவிடிபி நிறுவனர் வழங்கினார்

கிருஷ்ணகிரி: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் லிட்டில் பிளவர் சிறுவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோர்கள் பிரிந்த 310 சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். எவ்வகையிலும் இந்த குழந்தைகளின் கல்வி தடைப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு சலேசிய சபை அருட்சகோதரிகள் இக்குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கி இந்த இல்லத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள சிறுவர்கள் குளிர்காலங்களில் வெந்நீரில் குளிக்க ஏதுவாக சோலார் வாட்டர் ஹீட்டர் வழங்கி உதவுமாறு இல்ல நிர்வாகிகள் கேட்டுகொண்டதை ஏற்று ஐவிடிபி நிறுவனம் மூலம் 3 சோலார் வாட்டர் ஹீட்டர் 3 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த சோலார் ஹீட்டர் இயந்திரத்தை இந்த இல்லத்திற்கு வழங்கி பேசுகையில், ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ், இதுவரை ₹20 லட்சம் மதிப்பிலான சோலார் வாட்டர் ஹீட்டர் இயந்திரங்களை பல்வேறு குழந்தைகள் இல்லங்கள், மருததுவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது என்றார். நிகழ்ச்சியில், இந்த இல்லத்தின் தலைமை ஜோஸ்பின்ராணி மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.


Tags : founder ,IVVDP ,Pallikonda Children's Home ,IVDB ,Pallikonda Children , To Pallikonda Children's Home Water heater engine Presented by IVDB Founder
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை