×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நெல்லை, தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கானோர் மனிதசங்கிலி

நெல்லை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய மனிதசங்கிலி இயக்கத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு என்னும் மும்முனை தாக்குதலை எதிர்த்து தமிழகத்தில் கடந்த 26ம் தேதி முதல் எழுச்சி பிரசார இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி இயக்கம் நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. இதில் நெல்லை மாநகரில் ஆயிரக்கணக்கானோர் பாளை சதக்கத்துல்லா கல்லூரி தொடங்கி பேட்டை மதிதா கல்லூரி வரை 16 கிமீ தூரம் பங்கேற்றனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், எம்எல்ஏக்கள் மைதீன்கான், எஎல்எஸ் லட்சுமணன், தொமுச மாநில செயலாளர் தர்மர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எம்.சரவணன், நிர்வாகிகள் பேச்சிப்பாண்டியன், எஸ்வி சுரேஷ், ராமகிருஷ்ணன், வக்கீல் சங்கர், செண்டு, பேரங்காடி ஐயப்பன், மகாவிஷ்ணு, செய்யது தஸ்தகீம், மாரிப்பாண்டியன், புயல் மீனாட்சி, பேபி கோபால், சுந்தர்ராஜன், கோபாலகிருஷ்ணன், மயில் ராவணன், வேலாயுதம், நெல்லை கணேசன், மூளிக்குளம் பிரபு, மைக்கேல்ராஜ், கணேச பெருமாள், தியாகராஜநகர் செல்வக்குமார், அன்டன் செல்லத்துரை, அகஸ்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் பாளையில் காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அமீர்கான், ராஜீவ்காந்தி பிரிகேட் அந்தோணி செல்வராஜ்,  முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜபெருமாள், ஜேம்ஸ் போர்டு, காந்தி பேரவை பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஆசாத் பாதுஷா, தலைமை நிலைய செயலாளர் நஜிமுதீன் உள்ளிட்டோரும், டவுனில் நெல்லை மண்டல தலைவர் ஐயப்பன், பேட்டை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எஸ்பிடிஐ சார்பில் மாநில செயலாளர் அகமது நவவி, மாவட்ட தலைவர் எஸ்எஸ்.ஏ.கனி, பொதுசெயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், செயலாளர்கள் அலாவுதீன், ஹயாத் ஆகியோர் பங்கேற்றனர். மமக சார்பில் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், தமுமுக மாவட்ட செயலாளர் அலிப்பிலால், பொருளாளர் சேக், மேலப்பாளையம் பகுதி தலைவர் தேயிலை மைதீன், செயலாளர் காஜா, தமுமுக செயலாளர் பாதுஷா ஆகியோர் மேலப்பாளையத்தில் பங்கேற்றனர்.

அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன், நிர்வாகிகள் ஹைதர் அலி, பேச்சிமுத்து, ஸ்டார் அய்யப்பன், பாளை ரமேஷ், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லீக் சார்பில் மாவட்ட தலைவர் எல்கேஎஸ் மீரான் முகைதீன் தலைமையில் கடாபி மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தமஜக சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், ஜமால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் வரகுணன், சுடலைராஜ் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், நிர்வாகிகள் லட்சுமணன், நல்லதம்பி ஆகியோரும் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வக்கீல் ரமேஷ், சங்கரபாண்டியன், ஜமாத்துல் உலமா காஜா முகைதீன், மதிமுக விஜயகுமார் பாக்கியம், பங்குதந்தைகள் கென்னடி, அந்தோணிகுரூஸ், பிரிட்டோ, ஆதிதமிழர் பேரவை கலைகண்ணன்,  மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியில் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், பொருநை அமைப்பு மற்றும் பல்வேறு ஜமாத்தாரும் கலந்து கொண்டனர்.

கல்லூரி பேராசிரியர்கள் பொன்ராஜ், அமலநாதன் மற்றும் பாளை சதக்கத்துல்லா, சேவியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிகள் அருகே மனித சங்கிலியில் பங்கேற்றனர். மனித சங்கிலி திருச்செந்தூர் சாலை, நெல்லையப்பர் நெடுஞ்சாலை, டவுன் - பேட்டை சாலை, மேலப்பாளையம் - குலவணிகர்புரம் சாலை, தெற்கு பைபாஸ், புதிய பஸ் நிலையம் - நாகர்கோவில் சாலை என பல்வேறு இடங்களில் நடந்தது. மனிதசங்கிலியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கி பழைய மாநகராட்சி அலுவலகம் வரை 2 கிமீ தூரத்திற்கு குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் நடந்தது. ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, தலைமை வகித்தார். போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மதிமுக சுந்தரராஜன், தவாஉ கட்சி நிர்வாகிகள் கிதர்பிஸ்மி, மாரிச் செல்வம், திக பெரியாரடியான், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா பேரவை மாநில பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், மநேமக மாவட்ட செயலாளர் செய்யது சம்சுதின், விசிக மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரி மைந்தன், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் கைகளில் மூவர்ண ரப்பர் பேண்ட் அணிந்திருந்தனர். கழுத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி அட்டைகளையும் தொங்க விட்டவாறே பங்கேற்றனர். பலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

Tags : human beings ,tens of thousands ,Thoothukudi , Opposition to the Citizenship Amendment Act Paddy, Thoothukudi tens of thousands of mankind
× RELATED உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!