×

பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான சிறந்த வழிகள்

இந்தியாவில், பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதன் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்துகின்றன. குப்பைத் கழிவுகளை தரம் பிரித்து கையாள்வதற்கு பதிலாக, அனைத்து வகையான கழிவுகளையும் ஒரே குப்பைக் கிடங்கில் கொட்டி விடுகிறோம்.

இதன் விளைவாக மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் நிலங்களை ஆக்கிரமித்து சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இது குறித்த ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 9.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளில், 40% சேகரிக்கப்படாமல் நிலத்திலேயே புதைந்துவிடுவதாக கூறப்படுகிறது.

 பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு உதவும் வசதிகள் பல இருக்கும்போதிலும், மேற்கண்ட செய்ககையினால் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் நீர், நிலம் மாசுபாட்டிற்கு வழிவகுப்பது வருத்தமான ஒன்று. இந்தியாவின் முறைசாரா துறையைச் சேர்ந்த கந்தல் துணி எடுப்பவர்கள் ( சுமார் 1 மில்லியன்), நாட்டில் ஆண்டுதோறும் உற்பத்தியாகும் 62 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர் என்பதை நம்ப முடிகிறதா?. இவர்கள் தான் பிளாஸ்டிக் சேகரித்து பல்வேறு மறுசுழற்சி பிரிவுகளுக்கு விநியோகிக்கிறார்கள்.


alignment=



இந்தியாவின் பிளாஸ்டிக் மேலாண்மை அமைப்பில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் பிளாஸ்டிக் பி.இ.டி பாட்டில்கள் அதிக சதவீதம் வெற்றிகரமாக மறுசுழற்சி செய்யப்படுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகும். நாமும் கழிவுகளை தரம் பிரிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் சுற்றுசூழலில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கு என்றே இந்தியா, சுமார் 600,000 மற்றும் 10,00,000 * நேரடி மற்றும் மறைமுக மனிதவளத்தைக் கொண்டிருந்தாலும், கவனிக்கப்படாத மற்றும் மறுசுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக் குப்பைகள் நிலத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இது போன்ற தீங்குகளை தவிர்க்க ஒரே வழி, அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.

alignment=

இதற்கு முதல்கட்டமாக அனைத்து வகை குப்பைக் கழிவுகளையும் ஒரே கிடங்கில் கொட்டி சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல், குப்பைகளில் பிளாஸ்டிக்கை மட்டும் பிரித்து அவற்றை வேறு கிடங்கில் கொட்ட வேண்டும், பின்னர், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து, அதன் பின் அப்புறப்படுத்த வேண்டும்.



இச்செயலால் அதிக சதவீத பிளாஸ்டிக்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் உபயோகிக்கப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் நடைமுறையானது, குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சாத்தியமானதாகவும் கருதப்படுகிறது.இந்த செயல்பாட்டால், குறைந்த அளவிலான பிளாஸ்டிக்குகள் நிலப்பரப்புகளிலும் பெருங்கடல்களிலும் முடிவடைகிறது, இதனிடையே பிளாஸ்டிக் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது குறித்த பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் தற்சமயம் தொடங்கி உள்ளன. இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குவது தான், பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால், பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் கொடுப்பவர்களுக்கு பணமும் வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதன் மூலம், புதிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் 80 சதவீத ஆற்றல் பாதுகாக்கப்படும்.இறுதியாக, கழிவுகளை தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் சுற்றுசூழலுக்கும் சுகாதாரத்திற்கும் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று சொன்னால் அது மிகையல்ல...



Tags : Plastic,Effective Ways ,Dispose of Plastic
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...