×

நீண்ட இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியனில் இருந்து இன்று வெளியேறுகிறது இங்கிலாந்து

இங்கிலாந்து: நீண்ட இழுபறிக்கு பிறகு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று வெளியேறுகிறது. இங்கிலாந்து கடந்த 2016ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது பிரெக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டன் எக்ஸிட் என்பதன் சுருக்கமே பிரெக்ஸிட் ஆகும். பிரிட்டன் வெளியேறுதல் என்பதே இதன் அர்த்தம். பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் அன்றைய பிரதமர் கேமரன் மற்றும் தெரசா ஆகிய 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அந்த தேர்தலில் தனி பெரும்மான்மையுடன் அமோக வெற்றி பெற்றார்.

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர், பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் தனது ஒப்புதலை அளித்தார். அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் இங்கிலாந்து இன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முறைப்படி வெளியேறுகிறது. இன்று  நள்ளிரவில் இந்த பாராளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒரு நாடு வெளியேறுவது இதுவே முதன்முறை என்பதால், பிரெக்ஸிட் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.


Tags : European Union ,Brexit ,UK , Stuck, Decides, Brexit Treaty, European Union, UK, Exits
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது