×

இந்திய ஒருநாள் தொடர் நியூசி. அணி அறிவிப்பு: போல்ட், பெர்குசன், ஹென்றிக்கு இடமில்லை

வெலிங்டன்:   இந்தியாவுடன் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹமிஷ் பென்னெட், ஸ்காட் குகெலின் ஆகியோர் 2017க்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் லாதமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து வீரர்கள்: கேன் வில்லியம்சன், ஹமிஷ் பென்னெட், டாம் பிளன்டெல், கொலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஸ்காட் குகலின், டாம் லாதம், ஜிம்மி நீசம், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர்.

Tags : New Zealand ,ODI ,Indian ,Ferguson ,Henry ,Team announcement , Indian ODI Series New Zealand. Team announcement: No place for Bolt, Ferguson, Henry
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்