×

நியூசிலாந்துடன் இன்று 4வது டி20 இந்தியா வெற்றிநடை தொடருமா? சஞ்சு சாம்சன், சைனிக்கு வாய்ப்பு

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக 4வது டி20 போட்டியில் இந்திய அணி இன்று விளையாட உள்ளது. ஏற்கனவே தொடரை வென்ற நிலையில் இன்றைய போட்டியில், சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 போட்டியில் முதல் 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று, நியூசிலாந்து மண்ணில் இந்தியா முதன்முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது. 4வது டி20 போட்டி இன்று வெலிங்டன் ஸ்கை ஸ்டேடியத்தில் நடக்கிறது.

 முதல் 3 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் பரிசோதனை முயற்சியாக சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. விக்கெட் கீப்பிங்கில் ராகுலுக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கும், பவுலிங்கில் சைனி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. தொடரை தோற்றதால் நியூசிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளில் வென்று ஆறுதல் பெறும் நோக்கில் ஆக்ரோஷமாக களம் இறங்கும். இப்போட்டி இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு துவங்குகிறது.



Tags : T20 ,India ,New Zealand ,Saini ,Chanju Samson , New Zealand, India, Sanju Samson, Saini
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...