×

தெ.ஆப்ரிக்கா டி20 தொடர் இங்கிலாந்து வேகம் ஜாப்ரா ஆர்சர் நீக்கம்

ஜோகன்னஸ்பர்க்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்குகிறது. அதன்பின் 12ம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் ஜாப்ரா ஆர்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்ததால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் டி20 தொடரிலும் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.


Tags : UK ,South Africa T20 Series , South Africa, T20 Series, England, Jabra Archer
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது