×

கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி 14% குறைந்தது: தேவை 9% சரிவு

புதுடெல்லி:  இந்தியாவில் கடந்த 2019 ஆண்டில் தங்கம் இறக்குமதி மற்றும் தேவை தொடர்பான விவரங்களை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி, தங்கத்தின் தேவை 2019ம் ஆண்டில் 9 சதவீதம் சரிந்து 690.4 டன்களாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது 760.4 டன்களாக இருந்தது. இதுபோல் ஜூவல்லரி தேவை 9 சதவீதம் குறைந்து 544.6 டன்களாக உள்ளது. தங்கக்கட்டி, காசுகளுக்கான தேவை 10 சதவீதம் குறைந்து 145.8 டன்களாக உள்ளது.   இருப்பினும், விலை உயர்வால் மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் தேவை 3 சதவீதம் உயர்ந்து ₹2,17,770 கோடியாக உள்ளது. இதுபோல், கடத்தல் தங்கம் உட்பட, தங்கம் இறக்குமதி 14 சதவீதம் சரிந்து 646.8 டன்களாக இருந்தது.   பொருளாதார மந்த நிலை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு மற்றும் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்வு போன்றவை இதற்கு காரணம் என தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : Gold
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...