×

வினாடிக்கு 50 லட்சம் டன் ஹைட்ரஜன் எரிப்பு சூரியனை ஆராயும் இனோயி தொலை நோக்கி : புதிய சாதனைக்கு தயாராகும் விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக, அமெரிக்காவின் ஹவாய் நகரில் டேனியல் கே.இனோயி என்ற தொலைநோக்கி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியதாவது:

* இனோயி தொலைநோக்கியின் முதல் கட்ட ஆய்வில், சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு பற்றி, இதற்குமுன் அறியப்படாத தகவல்கள் விரிவாக கிடைத்தன. சூரியனின் செயல்பாடுகள்தான் விண்வெளி பருவநிலை என அறியப்படுகிறது.  
* சூரியனை பற்றி சமீபத்திய படங்கள், அதன் மையப் பகுதி கொந்தளிப்பாக இருப்பதை காட்டியது. சூரியனின் உள் பகுதியிலிருந்து, மேற்பரப்புக்கு வெப்பம் கடத்தப்படுகிறது. சூரியனின் சூடான வாயுங்கள், பிரகாசமான மையப் பகுதியில் உயர்ந்து பின்பு குளிர்ச்சியடைந்து குறுகிய பிளவுகளில் மூழ்குகிறது. இது வெப்பச் சலனம் எனப்படுகிறது. இதன் படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது கிடைத்துள்ளன.
* சூரியன் பிரம்மாண்ட அணு உலை போல், ஒவ்வொரு வினாடியும் 50 லட்சம்  டன் ஹைட்ரஜன் எரிபொருளை எரிக்கிறது. இதை 500 கோடி ஆண்டுகளாக சூரியன் எரித்து வருகிறது. இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இந்த பணியை தனது ஆயுட்காலத்தில் செய்யும்.  இந்த சக்தி முழுவதும் விண்வெளியில் அனைத்து திசைகளிலும் கடத்தப்படுகிறது. இதில், சிறு துளிதான் பூமியில் பட்டு இங்கு உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமாக இருக்கிறது.
* சூரிய வாயுக்களின் இயக்கம், சூரிய காந்த வயல்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இதுதான் சூரிய புயலுக்கு வழி வகுக்கிறது. இது நமது நவீன வாழ்க்கைக்கான தொழில்நுட்பங்களை பாதிக்க கூடியதாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதுதான், இனோயி தொலைநோக்கி ஆராய்ச்சியின் சிறப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : scientists , Hydrogen combustion, sun
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு