×

ராயப்பேட்டை பகுதியில் பர்தா அணிந்து மொபட் திருடிய 2 இளம்பெண்கள் கைது: 6 மாதமாக கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் கடந்த 6 மாதமாக நள்ளிரவில் பர்தா அணிந்து மொபட் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் ைகது செய்தனர். ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி பகுதியில் இரவில் சாலையோரம் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பைக் மற்றும் மொபட்கள் தொடர்ச்சியாக திருடு போவதாக ராயப்பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் பர்தா அணிந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.  குற்றவாளிகள், பர்தா அணிந்து இருந்ததால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

 இந்நிலையில் ராயப்ேபட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மீசார்பேட் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பெண்கள் பர்தா அணிந்து அங்கும் இங்கும் சுற்றி வந்தனர்.
அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.  அதில், ரீயான் (18), பர்கீன் ஜெக்ரா (19) என்பதும், இவர்கள் இருவரும் பர்தா அணிந்து கொண்டு நள்ளிரவில் ராயப்ேபட்டை, ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ச்சியாக மொபட் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  திருடிய மொபட்களை ஆண் நண்பர்கள் உதவியுடன் விற்பனை செய்து, திருவல்லிக்கேணியில் தனியாக வீடு எடுத்து தங்கி  கொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், பர்தா அணிந்து கடந்த 6 மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு 30க்கும் மேற்பட்ட பைக் மற்றும் மொபட்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த 2 பெண்களையும் கைது செய்தனர். இரண்டு பெண்களுக்கு உதவியாக இருந்த அவர்களின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். திருடிய பைக்குகளை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே திருவல்லிக்கேணி பகுதியில் மொபட் திருடி வந்த இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : teenagers ,Arrest ,Barda ,Bhopal , 2 teenagers arrested in Bhopal
× RELATED வரதட்சணை கொடுமையால் விபரீதம்: 2வது...