×

கழிவறையில் விழுந்த எஸ்ஐ கால் முறிந்தது

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற ஆவண காப்பக உதவி ஆய்வாளராக பிரபாகரன் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முதல் ஷிப்ட் என்பதால் பிரபாகரன் வழக்கம்போல் பணிக்கு சென்றார். காலை 6.50 மணிக்கு கமிஷனர் அலுவலக கழிவறைக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக பிரபாகரன் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு பணியில் இருந்த சக போலீசார் விரைந்து ெசன்று பிரபாகரனை மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபாகரன் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : restroom , Toilet, SI, foot broken
× RELATED பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில்...