×

பூண்டி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

சென்னை: பூண்டி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி காலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அதிமுகவை சேர்ந்த பி.வெங்கட்ரமணா ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  அன்று பிற்பகல் ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த அதிகாரிகள் காத்திருந்தும், கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை ஒன்றிய குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 12வது வார்டு திமுக கவுன்சிலர் மகாலட்சுமி மோதிலால் ஒன்றிய குழு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி அன்பரசு ஆகியோரை சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 11ம் தேதி  தேர்தல் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுகவை சேர்ந்த நாராயணன் போட்டியிட்டார்.  இதற்காக நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முனியம்மாள், ரோவதை, ஜெயராமன் ஆகியோர்களுடன் சென்றார்.

மேலும், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமியின்  ஆதவாளர்கள் லதா மற்றும் வனரோஜா ஆகியோர் சென்று தலைவர் இல்லாமல் தேர்தல் நடத்தக்கூடாது என்றனர். இதனால், நாராயணன் தரப்பிற்கும், ஊராட்சி தலைவரின் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  
பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் 3.30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், நாராயணன் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வாசுதேவன் வழங்கினார்.
 இதையறிந்த ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும் ஆதரவாளர்கள் நேரம் முடிந்து எப்படி தேர்தல் நடத்தலாம்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் நடைபெறும்  என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று மீண்டும் அறிவிக்கப்பட்டது.  இதில் நாராயணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் அதிகாரி பதவி பிரமானம் செய்து வைத்தார். பின்னர் தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்  உறுமொழி ஏற்றுக்கொண்டனர்.

அடையாளம்பட்டு ஊராட்சி: வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியில் துணைத் தலைவருக்கான தேர்தல் வார்டு உறுப்பினர்கள் வராததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய  ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற மறைமுக  தேர்தலில் பள்ளிப்பட்டு ஒன்றிய குழு தலைவராக அதிமுகவின் பி.ஜான்சிராணி  போட்டியின்றி வெற்றி பெற்றார்.  ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற  தேர்தலில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.   ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர்  தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 8 பேர்  பங்கேற்றனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பங்கேற்காததால், போதிய கோரம் இன்றி  இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக  தேர்தல் நடத்தும் அலுவலர்  தெரிவித்தார்.  


Tags : DMK ,Bundi ,union committee election , Bundi Union Committee Chairman Election, DMK
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்