×

இலங்கை பிரதமர் ராஜபக்‌சே அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இலங்கை பிரதமராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அவர் வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கு செல்கிறார். அடுத்த மாதம் 11ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்கிறார்.

Tags : Rajapaksa ,India ,Sri Lankan , Sri Lankan Prime Minister, Rajapakse, to visit India next month
× RELATED ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு...