×

திருப்பதி ஹதிராம்ஜி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக விற்ற கும்பல்: நிர்வாகி அதிரடி சஸ்பெண்ட்

திருமலை: திருப்பதியில் ஹதிராம்ஜி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ததாக மடத்தின் நிர்வாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் ஹதிராம்ஜி மடம் உள்ளது. இந்த மடத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. பின்னர், ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்று நிர்வகித்து வருகிறது. இருப்பினும் ஹதிராம்ஜி மடம் சார்பில் தினமும் ஏழுமலையானுக்கு ஆரத்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஹதிராம்ஜி மடத்திற்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் திருப்பதி, சென்னை, பெங்களூரு, மகாராஷ்டிரா உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ளது. இதில் திருப்பதியில் மட்டும் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிலங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மடத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மட்டும், மடத்தின் பொறுப்பு நிர்வாகியாக செயல்பட்டு வந்த அர்ஜுன் தாஸ் மஹந்த் என்பவர், முறைகேடாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில், அர்ஜுன் தாஸ் மஹந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக இந்த மடத்தின் பொறுப்புகள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : land ,gang ,Administrator Action , Tirupati, Hathiramji Math, Rs 100 crore, land, fraud, administrator, suspended
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...