×

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் சிக்கிய இந்திய அமெரிக்க தம்பதி மரணம் 3 குழந்தைகள் அனாதைகள் ஆகின

வெலிங்டன்: நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பில் சிக்கிய இந்திய அமெரிக்க தம்பதி பலியானதால், அவர்களின் 3 குழந்தைகளும் அனாதைகளாகி உள்ளனர். அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள ‘சேவா இன்டர்நேசனல்’ என்ற என்ஜிஓ அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரதாப் சிங். இவரது மனைவி மயூரி. இருவரும் இந்திய அமெரிக்கர்கள். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் இரட்டையர்களாக பிறந்த மகள்களும் உள்ளனர். இவர்கள் கடந்த மாதம் 9ம் தேதி, நியூசிலாந்தில் உள்ள வெள்ளை தீவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா சென்றனர். பிரதாப் சிங்கின் தாய் மற்றும் 3 குழந்தைகளும் கப்பலில் இருந்தனர்.

பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவியும், மற்ற பயணிகளுடன், ‘ஸ்டோன் மவுன்டைன்’ எரிமலை பகுதியை பார்வையிட சென்றனர். அப்போது திடீரென எரிமலை வெடித்து சிதறியது. இதில் 13 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் மயூரியின் உடலில் 72 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இவர் கடந்த மாதம் 22ம் தேதி இறந்தார். பிரதாப் சிங்குக்கு 55 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இவர் நியூசிலாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக போராடி கடந்த வாரம் இறந்தார். இவர்களின் மரணத்தால், இவர்களின் 3 குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.


Tags : children ,American ,Indian ,orphan ,New Zealand , New Zealand, volcanic eruption, indian american, couple, death, 3 children, orphans
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...