×

நடிகை பாமா திருமணம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாமாவின் திருமணம் நேற்று நடந்தது. மலையாள படவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பாமா. கடந்த 2007ல் ‘நிவேத்யம்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். பிறகு 30க்கும்  மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘சேவற்கொடி’, ‘ராமானுஜன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், கொச்சியை சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த ஜூனில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாமா- அருண் திருமணம் நடந்தது.  இதில் நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி, மியா, வினுமோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பிறகு பாமா கூறுகையில், ‘ என் வாழ்க்கையில் 2வது கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன்’ என்றார்.

Tags : Bama , Actress, Bama, married
× RELATED பாமக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!