இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம்: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தகவல்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். வரும் 7 ஆம் தேதி இந்தியா வரும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.  11 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது வாரணாசி, சர்னத், புத்த கயா, மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் ராஜபக்சே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேற்கண்ட தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர், மகிந்தா ராஜபக்சே இந்தியா வர இருப்பது இதுதான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>