×

வைஃபை தொழில்நுட்ப காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கு: ஆப்பிள், பிராட்காம் நிறுவனங்களுக்கு ரூ. 7840 கோடி அபராதம் விதிப்பு

கலிபோர்னியா: வைஃபை தொழில்நுட்ப காப்புரிமை மீறல் தொடர்பான இழப்பீட்டு வழக்கு ஒன்றில் ஆப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்களுக்கு சேர்த்து சுமார் 7 ஆயிரத்து 840 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கான முழு உரிமையையும் குறிப்பிட்ட காலம் வரை கண்டுப்பிடிப்பாளருக்கே உரியது என்று பதிவு செய்யப்படுவதாகும். இவ்வுரிமை குறிப்பிட்ட எல்லைக்குள் வழங்க முடியும். ஆக இந்த உரிமையால் உரிமையாளரைத் தவிர வேறெவரும் உருவாக்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ கூடாதென தடை செய்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் அமெரிக்கா மருத்துவர் ஒருவர், தனது மனுவில், ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3ல் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அதன்படி ஆப்பிள் நிறுவனம் தனது காப்புரிமையை மீறியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கு ஆப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்களின் மீது தொடரப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஐ போன்களில் பயன்படுத்தப்படும் வை-ஃபை சிப்களை பிராட்காம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சிப்களில் தங்களுக்கு சொந்தமான டேட்டா டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை திருடி விட்டதாக கலிபோர்னியாவை சேர்ந்த பாசிடேனா என்ற தொழில்நுட்ப ஆய்வு பல்கலைக்கழகம் கடந்த 2016ல் லாஸ் ஏஞ்செலஸ் நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட சிப் தொடர்பான காப்புரிமை தங்களிடம் இருக்கும் நிலையில் ஆப்பிளும், பிராட்காமும் சேர்ந்து அதனை திருடி விட்டன என்ற வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.


Tags : Broadcom ,Apple , WiFi, Technology, Patent, Apple, Broadcom, Rs. 7840 crores, fine
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!