×

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: மாணவர் ஒருவர் படுகாயம்

டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக  ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். முதன்முதலாக குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதே இந்த பல்கலைக்கழக மாணவர்கள் தான், இந்த போராட்டங்களில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மிகப்பெரிய வன்முறை மோதல்கள் ஏற்பட்டது. அதில் டெல்லி போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள், துப்பாக்கிச்சுடு போன்ற சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்றது.

அதே சமயத்தில் இந்த கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் எப்போது குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதோ, அப்போது இருந்தே இந்த மாணவர்கள் கல்லூரியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக நாங்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், ஆனால் டெல்லி போலீசார் எங்களை தாக்கியதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், ஆனால் சம்மந்தப்பட்ட போலீசார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இந்த போராட்டமானது இன்று நடந்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அந்த போராட்டத்திற்குள் நுழைந்து இருக்கிறார். அவர் டெல்லி போலீசாருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தார். தொடர்ந்து அவர் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் துப்பாக்கியை ஏந்தி மிரட்டியப்படியே சென்றுக்கொண்டிருந்தார்.

 ஒருகட்டத்தில் அவரால் முடியாத ஒரு சூழ்நிலையில் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். துப்பாக்கியில் இருந்து தோட்டா அந்த மாணவர் கையில் பாய்ந்ததால் அவர் படுகாயம் அடைந்தார். அந்த மாணவரை அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று இருக்கிறார்கள். திடீரென போராட்ட களத்தில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் துப்பாக்கியால் சுட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Delhi Jamia Millia University ,campus , Delhi, Jamia Millia University, Mystery Person, Gunfire
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...