×

தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியரால் இதே நாளில் கொல்லப்பட்டார்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!

சென்னை: தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியரால் இதே நாளில் கொல்லப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 1948ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்தியர்களால் மகாத்மா என்று அழைக்கப்படும் அகிம்சை வழியில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த சமூக போராளி மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, நாதுராம் கோட்ஷேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடம் ஜனவரி 30 ஆம் ஆண்டு காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு இன்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும் சராசரி விமர்சன வடிவம் படுகொலை ஆகும். உலக அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த வழிகாட்டி, இந்த நாளில் தேசபக்தி கொண்ட இந்தியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது, என்று பதிவிட்டுள்ளார். கமல் ஹாசன் தனது இந்த டுவிட் பதிவின் மூலம் நாதுராம் கோட்சேவை கிண்டல் செய்துள்ளார். அதாவது கோட்சே தேச பக்தி கொண்டவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்றும், அவர் தான் மகாத்மா காந்தியை கொன்றுள்ளார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அத்துடன் படுகொலை என்பது மிக மோசமான எதிர்வினை என்பதையும் தனது பதிவின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Tags : nation ,Kamal Haasan ,Mahatma Gandhi ,Indian ,UPFA , Mahatma Gandhi, Kamal Haasan, Patriot, Twitter
× RELATED பதவி நீக்கம் செய்யப்பட்ட...