×

காகித பதிவேடு முறையை கைவிட்டு ரயில்வேக்கு டிஜிட்டல் நிர்வாகம் தேவை: டிஆர்இயூ வலியுறுத்தல்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. பல்வேறு துறைகளில் பண பரிவர்தனைகள்  அனைத்தும் டிஜிட்டல் முறையில் கையாள ஊக்குவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 15 ம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண வசூல்  கூட பாஸ்டேக் என்ற டிஜிட்டல் முறையில் வசூலிப்பது கட்டாய மயமாக்கப் பட்டுள்ளது.அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் டிஜிட்டல் மையத்தை புகுத்தி வரும் மத்திய அரசு மிக பெரிய துறையான ரயில்வே துறையில் டிஜிட்டல்  மயத்தை எந்தளவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது, டிஜிட்டல் மயம் தொடர்பாக ரயில்வே துறையில் எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது  என்பது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில்,கண்ணாடி நூல் இழை கேபிள் இணைப்பு மின்னணு தகவல் பரிமாற்றத்திற்கு மிக அவசியம். இதற்காக 66 ஆயிரம் கி.மீ பாதையில் ரயில்வே  மேற்கொண்டு வரும் கேபிள் அமைக்கும் பணி நிறைவடைய இருக்கிறது. நடப்பு 2019-20 நிதியாண்டு 7600 கி.மீ தூரத்திற்கு கேபிள்  பதிக்கப்படுகிறது. கேபிள் தொடர்புகள் கைவசம் இருந்தும் ரயில்வே தகவல் தொழில் நுட்பம் கையாள்வதில் பின்தங்கி இருக்கிறது.

13 லட்சம் ஊழியர்கள் நிர்வகிக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கு இஆர்பி எனப்படும் வர்த்தக நிர்வாக மென்பொருள் இல்லை. இந்திய ரயில்வே திட்ட  ஒப்புதல் நிர்வாகத்திற்கும், ரயில்வே மின்னணு கொள்முதல் நிர்வாக அமைப்பிற்கும் இடையே புள்ளி விவர பரிமாற்றங்களுக்கான தகவல் தொழில்  நுட்பமும் இல்லை.மென் பொருட்கள் கையாளும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் (கிரிஷ்), ரயில் இந்தியா, ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை  நிறுவனம், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றலா கழகம், ரயில் டெல் நிறு வனங்கள் ஒருங்கிணைந்து ரயில்வே தகவல் தொழில்நுட்ப  வளர்ச்சியில் செயல் படவில்லை. இதனை சரிசெய்ய கடந்தாண்டு நவம்பர் மாதம் ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் தலைமையில்  இந்நிறுவனங்களின் கூட்டம் நடந்தது.

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் தேவைகள், இயங்கும் விவரங்கள் ஊழியர்கள் நலன்கள் போன்ற வற்றிற்கு புதிய மென்பொருட்கள் உருவாக் கும்  பொறுப்பை ரயில்வே தகவல் அமைப்பு மையம் வசம் ஒப்படைப்பது. இதற்காக இத்துறையில் கைதேர்ந்த அதிகாரிளை களத்தில் இறக்குவது என  கூட்டம் முடிவு செய்தது.மேலும் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கான ரயில் டேஷ் போர்டு செயலி, என் ரயில் நிலையத்தை பார் செயலி, ரயில்வே திட்டங்கள் நிர்வகிக்கும்  செயலி, வழக்கமான ரயில்வே ஆய்வுகளுக்கான செயலி, புதியபாதை, அகலப் பாதை, மின் மய திட்டங்களை கண்காணிக்கும் செயலி,  மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் திட்டம் மற்றும் பணி நிலவரம் கண்காணிக்கும் செயலி, ரயில் நிலையங்கள் வளர்ச்சி பணி கண்காணிப்பு செயலி,  பல செயலிகள் அடங்கிய முதன்மைச் செயலி என 11 ஆன்ராய்டு செல்போண் செயலிகளை ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை  நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அவைகளை நடைமுறைக்கு கொ ண்டு வருவதை உறுதி செய்தது.

டெல்லி சாணக்கியபுரியில் உள்ள ரயில்வே இணையதள டேட்டா மையத்திற்கும், ரயில் டெல் நிறுவனத்திற்கும் ஒப்பு நோக்கும் இணையதள  தொடர்பு ரயில்வே மருத்துவ மணைகளில் “மருத்துவமனை தகவல் நிர்வாக முறை” , “சிக்னல் பராமரிப்பு நிர்வாக முறை”, “ரயில்வே டெப்போக்கள்  நிர்வாக முறை”, “ரயில்வே சொத்துக்கள் நிர்வாக முறை,” ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு முறை  போன்றவற்றிற்கு மென் பொருட்கள் உருவாக்க முடிவெடுத்தது.இந்த கூட்ட முடிவை நிறைவேற்றுவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்தின் உருமாற்றத்திற்கான தலைமை பொறியாளர் ஏ.கே.சந்ரா கடந்த  ஜனவரி 10 ம் தேதி அன்று வெளியிட்டார். தகவல் தொழில் நுட்ப பணிகளு க்காக தனியார் ஐ.டி நிறுவனத்தை பணியமர்த்தவும் ரயில்வே  திட்டமிட்டு இருக்கிறது.

ரயில் நிலையங்கள், பொறியாளர் அலுவலகங்கள், பராமரிப்பு பணிமணை கள், மருத்துவமனைகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே  அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் தலா 100 முதல் 200 பதி வேடுகள் காகிதத்தால் கையாளப்படுகிறது. கனிணி பதி  வேடுகளாக இவைகள் மாற்றப்பட வேண்டும்.எனவே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கனிணி, மென்பொருள் மற்றும் ரயில்வே இணையதள தொடர்பு, ஆண்ட்ராய்டு செயலி திட்டங்களை  ஒருங் கிணைத்து “டிஜிட்டல் ரயில்வே திட்டம்” உருவாக்க வேண்டும். காகித பதி வேடுகள் முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும்.இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : Railways ,TREU , Railways,digital ,abandon paper , DREU Emphasis
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்