×

வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை கட்டும் பணி தொடக்கம்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

வத்திராயிருப்பு: தினகரன் செய்தி எதிரொலியாக அரைகுறையாக கிடந்த போக்குவரத்து பணிமனை கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. தினகரன் செய்தி எதிரொலியாக நான்கரை ஆண்டுகள் போக்குவரத்து பணிமனை  4 ½ ஆண்டுகளுக்கு மேலாக வேலை முடிக்கப்படாமல் இருப்பதாக  தினகரன் செய்தி வௌியிட்டதின் எதிரொலியாக எம்எல்ஏ பாரா்வையிட்டு ரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை முடிக்க உத்தரவிட்டார். வத்திராயிருப்பில் கடந்த நான்கரை ஆண்டுக்கு முன் போக்குவரத்து பணிமனை கட்டும் பணி தொடங்கியது. வேலை இதுவரை  முடிவடையவில்லை. கட்டப்பட்ட கட்டிடம் சேதமடையும் நிலையில் இருந்து வருகிறது. மேற்கூரை கம்பிகள் துருப்பிடித்து சேதமடைந்து வருகிறது.  பணிமனை கட்டிடத்திற்கு முன்பு பெரிய பள்ளம் இருந்து வருவதோடு முட்செடிகள் புதர் மண்டிக்கிடக்கின்றன. போக்குவரத்து பணிமனை  செயல்பாட்டிற்கு வராததால் வத்திராயிருப்பில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. வத்திராயிருப்பு தாலுகாவாகி  ஓராண்டு முடிய போகிறது. ஆனால் போக்குவரத்து பணிமனை வேலை முடிவடையவில்லை. ரூ.1 கோடிக்கு மேல் செலவழித்தும் இன்னமும்  வேலை முடியாமல் இருந்து வருகிறது என தினகரனில் செய்தி வௌியானது.

இதன் எதிரொலியாக  திருவில்லிப்புத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா போக்குவரத்து பணிமனையை பார்வையிட்டர். தனது சட்டமன்ற  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பூமி பூஜையிலும் கலந்து  கொண்டார். அவருடன் திருவில்லிப்புத்தூர்  அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, திருவில்லிப்புத்தூர் போக்குவரத்து பணிமனை கிளை  மேலாளர் ரவிச்சந்திரன், வத்திராயிருப்பு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Tags : Transport Workshop , Starting work, Transport Workshop , Vattrayaippu
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...