×

கரூர் கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் விபத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு: வாகனஓட்டிகள் கோரிக்கை

கரூர்: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவுச் சாலையில் அடிக்கடி நிலவும் விபத்தினை தடுக்கும் வகையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கான பிரிவுச் சாலை செல்கிறது. கரூரில் இருந்து ராயனூர்  வழியாக கோடங்கிப்பட்டி, ஈசநத்தம், சுக்காலியூர், மதுரை பைபாஸ் சாலை, பாகநத்தம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து  வாகனங்களும் கோடங்கிப்பட்டி பிரிவுச் சாலையை அடைந்து பிரிந்து செல்கிறது.கோடங்கிப்பட்டியை சுற்றிலும் நு£ற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் இரண்டு சக்கர வாகனங்களில் கரூர் போன்ற  பகுதிகளுக்கு வருவதற்கும் பைபாஸ் சாலையை கடந்துதான் செல்கின்றனர். இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும்  போது விபத்து சம்பவங்கள் இந்த சந்திப்பு பகுதியில் அதிகளவு நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக, கோடங்கிப்பட்டி பிரிவுச் சாலை பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் உயர் மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட முறை இந்த பகுதியில் சாலை மறியல் நடந்துள்ளது.இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூர் திருச்சி சாலையில் உள்ள மற்றொரு பகுதியான வீரராக்கியம், கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள  மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், பெரியார் வளைவு போன்ற பகுதிகளிலும் குகைவழிப்பாதை அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளான, ஆய்வுகள், திட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இருந்தாலும் இந்த பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அனைவரும் கடும் அவதியிலும், விரக்தியிலும்  உள்ளனர்.எனவே, மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக விளங்கி வரும் இந்த சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள தேவையான  ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : accident ,motorists ,road ,Karur Kodangipatti Division ,Karur Kodangipatti Division Road Safety , Karur ,Kodangipatti, prevent ,accident
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...