×

பிளாஸ்டிக் ரோடுகள் போட ரிலையன்ஸ் புது திட்டம்

நகோதானே: நாட்டின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.  பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைப்பதில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் திட்டத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் மேலாண்மை இல்லாததால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவதை 2022ம் ஆண்டுக்குள் நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக நாட்டின் நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் சில மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆக்கப்பூர்வமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொருள்களை எடுத்துச் செல்வதற்காக மிகவும் மிருதுவான பிளாஸ்டிக் (ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படுவது) பொருளால்தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருளுடன் மற்ற இரசாயணப் பொருட்களை சேர்த்து நீண்டகாலம் பயன்படும் வகையிலான பொருளாக மாற்றி சாலை அமைக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

15 நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அதிகம்
கடந்த 2018ம் ஆண்டில் காற்று மாசு பற்றி ஆய்வு மேற்கொண்ட இரண்டு அமைப்புகள்ின் அறிக்கையில், உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள 20 நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 15 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லி, காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Reliance ,roads , Reliance New Plan for Plastic Roads
× RELATED தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்...