ஆஸ்திரேலிய ஓபன் நடால் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் நேற்று மோதிய நடால் (ஸ்பெயின்) 6-7 (3-7), 6-7 (4-7), 6-4, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் 4 மணி, 10 நிமிடம் போராடித் தோற்றார். மற்றொரு கால் இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 1-6, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். அரை இறுதியில் டொமினிக் தீம் - ஸ்வெரவ் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்டோனியா) வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் (ரஷ்யா) மோதிய ஸ்பெயின்  வீராங்கனை கார்பினி முகுருசா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

* தொடக்க வீரராக 3 வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்து 10,000 ரன் குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கவாஸ்கர், சச்சின், சேவக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

* டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனை கோஹ்லி வசமாகி உள்ளது. ஹாமில்டனில் நேற்று 38 ரன் எடுத்த அவர் டோனியின் 1112 ரன் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார் (1126 ரன்). இந்த வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டு பிளெஸ்ஸி (1273), நியூசிலாந்தின் வில்லியம்சன் (1148) முன்னிலை வகிக்கின்றனர்.

Related Stories: